நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களைநேரடியாக எளிதில் சென்றடைவதாக தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்கூறியுள்ளார்.

 கோயம்புத்தூரில் ரத்தினபுரி பகுதியில் இன்று (07-01-2024) நடைபெற்றநமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர்டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டார்.

 மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்தநிகழ்ச்சியில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதிதிட்ட கடனுதவி மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும், தபால் துறையின்செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும், இலவச சமையல் எரிவாயு இணைப்புத்திட்ட பயனாளிகளுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு திட்டப் பயன்கள் வழங்கப்பட்டன.

 இதனை மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்துவளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேசத்தைவளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார். ஏழைகளுக்கான நலத்திட்டங்கள்உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் என அனைத்தும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர்கூறினார்.

 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் விரைந்து அமைக்கப்பட்டு வருவதாகவும் கோயம்புத்தூர் விமானநிலையம் உட்பட நாட்டின் விமான நிலைங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு, சேவைகள் விரிவாக்கப்படுவதாகஅவர் கூறினார்.

 ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய்மூலம் குடிநீர் வசதி திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம்கோடிக் கணக்கானோர் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

 பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சியின் மூலம் மத்திய அரசின் திட்டப் பயன்கள்மக்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்றடைவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரை திட்டங்களில்பயனடையாத பலர் இந்த யாத்திரையின் மூலம் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெற்று வருவதாகஇணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை விழிப்புணர்வு வாகனத்தை நேரில்பார்வையிட்டு மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய நாட்காட்டியை அமைச்சர் பொதுமக்களிடம்விநியோகித்தார்.

 இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்கலந்து கொண்டனர்.