தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில், இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), இந்திய அரசின் நுகர்வோர்விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வஅமைப்பாகும்.

இது தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்புசான்றிதழ் (.எஸ். குறியீடு), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் முத்திரை மற்றும் ஆய்வக சேவைகளின் போன்ற பல்வேறுதிட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனம் தனது கல்வி அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக, 17 நவம்பர் 2023 அன்று, தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ( NITTTR )  சென்னையுடன் புரிந்துணர்வுஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய தர நிர்ணய அமைவனம், தேசிய தொழில்நுட்பஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ( NITTTR ) சென்னையில் 06.02.2024 , இன்று கல்லூரியின்ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்வின் மூலம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளான, தரநிலைகளைமேம்படுத்துவதற்கான R&D முயற்சிகளை ஒருங்கிணைத்தல், தற்போதுள்ள R&D திட்ட வெளியீடுகளை

தரநிலைகளுடன் ஒருங்கிணைத்தல், பாடத்திட்டங்களில் தரநிலைகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவித்தல், அறிவு பரிமாற்றம், தரநிலைகள் மூலம் எவ்வாறு புதுமைகளை ஊக்குவிக்கலாம் மற்றும் எளிதாக்கலாம் என்பதைசெயல்படுத்துவதற்கான மையங்கள் அமைத்தல் போன்றவை செயல்படுத்தப்படும்.

BIS அதிகாரிகளான, டாக்டர். மீனாட்சி கணேசன்தலைவர் (தென் பிராந்திய ஆய்வகம்), ஸ்ரீமதி. ஜி. பவானி, இயக்குனர் & தலைவர் (சென்னை கிளை அலுவலகம்), திரு. கௌதம் பி ஜே, சென்னை கிளை அலுவலகம், திரு. முஹம்மது இஸ்ராஃபில், எலக்ட்ரோடெக்னிக்கல் துறை, திரு. ராஜேஷ் சௌத்ரி, சிவில் இன்ஜினியரிங்துறை, திரு. சாகிப் ராஹி, உலோகவியல் பொறியியல் துறை, ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிலரங்கைநடத்தினர்.

இந்த பயிலரங்கில் BIS பற்றியும், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பை தரநிலைப்படுத்துதல், தரநிலைகளைஉருவாக்குவதில் ஆராய்ச்சி திட்டங்களின் பங்கு, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் டிஜிட்டல் முயற்சிகள்பற்றிய அம்சங்கள் இடம்பெற்றன.

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் உஷாநடேசன் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையின் பல்வேறுதுறைகளைச் சேர்ந்த சுமார் 70 ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.