தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில்உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் MP.விஸ்வநாதன்தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள்  லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில்மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக்கொள்ள அதை துணைத்தலைவர் பூச்சிS.முருகன் முன்மொழிய, லதா அதை வழிமொழிந்தார்.

பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை சரளா 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். 2023-2024 ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் மற்றும் கணக்குத் தணிக்கையாளர் அறிமுகம் செய்து ஒப்புதல்பெறப்பட்டது. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள் நடைபெற்றது. கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி விளக்கம் அளித்தார்.

கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கி கடன், நட்சத்திரங்களிடம் நிதிதிரட்டுதல், நடத்திர கலைவிழா நடத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி பொதுச்செயலாளர் விஷால்ஒப்புதல் பெற்றார். தலைவர் நாசர் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார் அதைத் தொடர்ந்து துணை தலைவர் பூச்சி S.முருகன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம்இசைக்கப்பட்டு பொதுக்குழு கூடம் இனிதே நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கண் பரிசோதனை செய்த டாக்டர் விஜய் சங்கர், முழு உடல்பரிசோதனை செய்த அப்பல்லோ டாக்டர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், ஆடிட்டர் ஶ்ரீராம் சுந்தர் , பிஆர்ஒ ஜான்சன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் லதா சேதுபதி, சச்சு, ராஜேஷ், பசுபதி,அஜய் ரத்தினம், கோவை சரளா, விக்னேஷ், சரவணன், நந்தா, ஹேமசந்திரன், ஶ்ரீமன், பிரேம்குமார், தளபதிதினேஷ்,எம்..பிரகாஷ், வாசுதேவன், ரத்தினசபாபதி, காளிமுத்து, குஷ்பு, மற்றும் சங்க மேலாளர் தாமராஜ்உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை ஶ்ரீமன் தொகுத்து வழங்கினார். முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.