“ஆலகாலம்” திரைப்பட விமர்சனம்

ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில்  ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம்ஆலகாலம்“. ‘குடி குடியை கெடுக்கும்என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதியபொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை செல்கிறது. உச்சகட்ட காட்சியை வித்தியாசமாகஅமைத்ததற்காக இயக்குநரைக் கைவலிக்கும் வரை, கரம் குலுக்கிப் பாராட்டலாம். ********

இதில் கதைநாயகன் ஜெய் பாத்திரத்தில் இயக்குநர் ஜெய கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.தாய் மீது அளவற்ற பக்தி வைத்திருக்கும் ஜெய்.. கல்லூரியில் படிக்கத்தொடங்கியதும் காதலிப்பது, மது அருந்துவது, நண்பர்களுடன் சண்டை போடுவது, காதலியைக் கல்லூரிவளாகத்தில் வைத்து முத்தமிடுவது, இதனால் ஜெய்யும், தமிழும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட்செய்யப்படுவது, ‘மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் உன்னுடைய தாயின் உத்தரவாதம்தேவைஎன கல்லூரி முதல்வர் கண்டிப்புடன் சொல்ல.. தாயிடம் இதனைச் சொல்ல தைரியம் இல்லாததால்ஊருக்குச் செல்லாமல்தன் காதலி தமிழைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழத்தொடங்குகிறார்என திரைக்கதை மிக மிக இயல்பாகவும், யதார்த்தமாகவும் பயணிக்கிறது.

நாயகன் ஜெய் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவுடன் ஒரு கட்டத்தில் ஒரு காலையும் இழக்கிறான். அந்நிலையிலும் கூட அவனுடைய மது அருந்த வேண்டும் என்ற வேட்கையின் தீவிரம் குறையவில்லை. மதுஒருவனை எப்படிச் சீரழிக்கும் என்பதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.