அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

நடிகை குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா,ராஷி கன்னா, டெல்லி கணேஷ், யோகி பாபு, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் அரண்மனை 4. இதற்கு முன் வெளிவந்த  அரண்மனை மூன்று பாகங்களிலும் ஒரு பெண்ணை கொலை செய்வார்கள் அந்தப் பெண் ஆவியாக மாறி தன்னை கொன்றவர்களை பழிவாங்கும்.  ஆனால் அரண்மனை நான்காம் பாகம் கதை வித்தியாசமானது. ஒரு தீய சக்தி தெய்வ சக்தியை  அடைய விரும்புகிறது.  அதற்கு ஒரு குறிப்பிட்ட  நாளில் பிறந்த  மூன்று நபர்களை கொலை செய்தால் அந்த தீய சக்தி தெய்வ  சக்தியை அடைந்து விடும்  என்பது கதை. அந்த தீய சக்தி வென்றதா?  இல்லையா? என்பதை திரையில் காணலாம்.  குழந்தைகள் ரசிக்கும் படி மிகவும் நகைச்சுவையோடு சுந்தர் சி இந்த படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது.  எந்த காட்சியிலும் தொய்வு ஏற்படாமல் படத்தை ஓடவிட்டு இருக்கிறார். தாய் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் தமன்னாவின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது.  யோகி பாபு  விடிவி கணேஷ்  ஆகியோரின் நகைச்சுவை  கலாட்டாக்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.  ஹிப் ஹாப் தமிழாவின் இசை ரசிகர்களை  நாற்காலியின் நுனிக்கே கொண்டு செல்கிறது. உச்சகட்ட காட்சியின்  பாடலின் போது, சாமி ஆடும் பெண்கள்  திரையரங்கில் சாமி ஆடி விடுவார்கள். அந்த அளவிற்கு நடிகைகள்   சிம்ரனும் குஷ்புவும்  சாமி பிடித்து ஆடுகிறார்கள்.  ஆதி தமிழாவின் இசை  திரையரங்கிலும் சாமியாட வைக்கிறது. ராஷி கன்னா, தன்னாவின் ஆடல் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.********