31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்றவிமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன்(27) என்பவர் தங்கம் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின்பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறைஅதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 715 கிராம் எடையிலானதங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில்மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பில்மொத்தம் 633 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரைகண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியேஅழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச்சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்தகடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம்தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது Read More

போலந்தில் இருந்து வந்த தபால் பார்சலில் உயிருள்ள சிலந்திகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

அரிதான உயிரினங்கள் கடத்தி வரப்படலாம் என்ற தகவல் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில். வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு போலந்தில் இருந்து வந்த பார்சல் ஒன்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபர் ஒருவருக்கு அந்த பார்சல் வந்திருந்தது. வெள்ளி …

போலந்தில் இருந்து வந்த தபால் பார்சலில் உயிருள்ள சிலந்திகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ-950 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபசுலுதீன், 26, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர், அவரை சோதனையிட்ட போது, 707 கிராம் எடை …

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது Read More

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய, சென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் ஜெய்னுலாபிதீன், 62, என்பவர், வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக அவர் பதிலளித்ததை …

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், 1.25 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின்மதிப்பு ரூ. 63.20 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த நபர்கைது செய்யப்பட்டார்.  உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்துசென்னை வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கபரிசமினோ ஜேசய்யா(26) என்பவரிடம் சுங்க அதிகாரிகள்சோதனை நடத்தினர். அப்போது அவரது பெல்ட் மற்றும்ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்து  9 பாக்கெட்டுகளில் 1.42 கிலோ எடையில் தங்க பசைகள் பறிமுதல்செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 1.25 கிலோஎடையுடைய சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.63.20 லட்சம். இதையடுத்து ஜேசய்யா கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாகசென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர்தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத்தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாகசென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்தவிமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கைசந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில்அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்கஅதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்துமுன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன.  பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின்  பவுடர்என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்தஇந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தைமதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும்சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்தியவிசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்துதில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில்சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென்ஆப்பிரிக்காவின்   கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொருபெண்ணும் வந்தது தெரியவந்தது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில்இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக மேலும்விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேசவிமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது Read More

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான 1.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து, சென்னை வந்த முகமது அஷ்ரப் என்ற பயணியிடம் …

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது Read More

18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுப் பிரிவின் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் ஏ ஐ 906 சோதனையிடப்பட்டது. சோதனையின் போது, விமானத்தின் பின்புற கழிவறையில் பொட்டலம் …

18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் Read More

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ பெண் இன்ஸ்பெக்டர் கைது – சிபிஐ

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக திருப்பூர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இபிஎப்ஓ) அமலாக்க அதிகாரியாக பணி புரியும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் தனியார் நபர்கள் இருவரை சிபிஐ கைது செய்தது. திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இபிஎப்ஓ …

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ பெண் இன்ஸ்பெக்டர் கைது – சிபிஐ Read More

சென்னை விமான நிலையத்தில் 1.41 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஹாஜாமைதீன், 28, மற்றும் சென்னையை சேர்ந்த புஷ்பராஜ், 28, ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து …

சென்னை விமான நிலையத்தில் 1.41 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது Read More