மட்டை பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் “கபில் ரிட்டன்ஸ்”

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர். ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்சரவணன், வையாபுரி, மாஸ்டர்பரத், மாஸ்டர் ஜான்,பேபி ஷர்ஷா மற்றும் பலரும் உள்ளனர். மட்டை பந்தாட்டத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் அப்பா. அதற்கு  காரணம் மகன் கிரிக்கெட்டில் வெற்றி பெற நினைக்கிறான். இதை புரிந்து கொண்ட மனைவி கணவரை மாற்றுகிறார்.அப்பாவும் மனசு மாறி மகனைஜெயிக்க வைக்க நினைக்கிறார். அது நடந்ததா ? அவர்கள் எதைத் தாண்டி சாதித்தார்கள் என்பதை அப்பாமகன் பின்னணியில் தன்னம்பிக்கை கதையாக உருவாகியுள்ளது.*******

கனவு நிறைவேற மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் என்ற கருத்தையும் கூறுகிறார் இயக்குனர்பேராசிரியர். ஸ்ரீனி சௌந்தரராஜன். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒரு முறை கேட்டாலே திரும்ப திரும்ப கேட்க தூண்டும். குழந்தைகள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் பார்க்க தூண்டும் படமாக உருவாகியுள்ளது.

ஒளிப்பதிவு–  ஷியாம் ராஜ் பாடல்கள் –  கவிஞர் சினேகன், கவிஞர் பா.விஜய் கவிஞர் அருண்பாரதி இசை –  ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் மக்கள் தொடர்புவெங்கட் நிர்வாகத் தயாரிப்பு.ஆர்.சூரியன் கதை திரைக்கதை வசனம் இயக்கம்பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன்