வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று 2005ல் கூறிய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர்

2005ம் ஆண்டு கனடாவின் பல கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் ஒருவராகச் சென்றிருந்த தற்போதைய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் -Pierre Poilievre.- அவர்கள்வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டாஎன்று கூறிவிட்டு அநுராதபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கிவிட்டார்.

டிசம்பர் 26, 2004 அன்று தான் இலங்கை இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளை சுனாமி என்னும் கொடிதான பேரலைகள் தாக்கி அழித்தனதொடர்ந்து. 2005ம் ஆண்டு இலங்கையில் சுனாமியின் தாக்கத்தால் பாதிக்கப்பெற்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக இலங்கைக்கு சென்ற கனடிய அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்ச் சமூகம் சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவில் அங்கம் வகித்த கனடிய தேசிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் -Pierre Poilievre.- அவர்கள் அப்போது அந்தக் குழுவில் இடம்பெற்ற ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விட வேறுபட்டவராகவே காணப்பட்டார்.

அவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் செல்ல மறுத்து அநுராதபுரத்திலேயே தங்கிவிட்டார் என்ற செய்தியை சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் தற்போது தோன்றியுள்ளது.

ஏனெனில் தான் கட்சியின் தலைவராக வருவதற்காக தமிழ் மக்களின் ஆதரவை வேண்டி வெளியிட்ட பிரசுரத்தில்இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு  எதிராக உலகின் எந்தப் பாகத்திலும் குரல் கொடுப்பேன்என்று குறிப்பிட்டிருந்தார்.

இங்கே காணப்படும் படங்களில் ஒன்றில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது. தனது உத்தியோகபூர்வ இலலத்தில் கனடிய குழுவினரை சந்தித்தார்.

அப்போது அப்போதைய லிபரல் அமைச்சர் மரிய மின்னா (மீனா அக்கா) அவர்கள் ரணிலுடன் உரையாடலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் கனடிய தேசிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர்பொலிவியர் -Pierre Poilievre.-எமது புகைப்படத்திற்குபோஸ்கொடுத்தார்.

ஏனைய படங்களில் அப்போதைய அமைச்சர் மரிய மின்னா மற்றும் அப்போதைய கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி. தேவர சா ஆர்வத்துடன் உரையாடுவதையும். எமது வன்னி விஜயத்தின் போது எமது வாகனத்திற்கு பாதுகாப்பளித்த தமிழீழ காவல்துறையின் கம்பீ;ரமானஜீப்அருகில் கனடாவின் வர்த்தகப் பிரமுகர் தயாளன் மற்றும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆகியோர் நிற்;பதையும் காணலாம்.