ஒரே சமயத்தில் ஆறேழு படங்களில் நடித்து வரும் வேதிகா

ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத நடிகை வேதிகா.’காளை‘, ‘முனி‘, ‘பரதேசிபோன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர்.தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில்  நடித்து வருகிறார். தமிழில் பிரபுதேவாவுடன்‌பேட்ட ராப்‘, கதையின்  நாயகியாகமஹால்ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கில் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகிவரும்  ‘கானாபடத்திலும் நடித்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர நடிகையாக அனைத்து மொழிகளிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் வேதிகா.