‘கார்டியன்’ திரைப்பட விமர்சனம்

விஜய் சந்தர் தயாரிப்பில் குரு சரவணன் மற்றும் சபரி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி,  பிரதீப் ராமன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், சுரேஷ் மேனன்,  ஶ்ரீராம்பார்த்தசாரதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன்தங்கத்துரை, அபிஷேக் வினோத், சோபனா பிரனேஷ், தியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்படம்கார்டியன்  இது ஒரு பேய் படம்.  பேய் படம் என்றாலே இளம் வயதில் ஒரு பெண்ணை கொலைசெய்திருப்பார்கள் அந்தப் பெண் ஆவியாக மாறி கொலை செய்தவர்களை பழிக்கு பழிவாங்கும் இதுதான்எல்லா பேய் படங்களுக்கும் வரக்கூடிய கதையாகும். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கும் படம் தான்ஹன்சிகா மோத்வானி நடித்த கார்டியன்.. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானியின் அம்மாவை கொலைசெய்கிறார்கள் அந்த ஆவி ஹன்சிகா மோத்வானி உடலில் புகுந்து கொலை செய்தவர்களைபழிவாங்குகிறது. இதுதான் மற்ற பேய் படங்களுக்கும் இந்த படத்திற்க்ம்உள்ள ஒரு சிறிய வித்தியாசம்.  ஹன்சிகா மோத்வானியின் அம்மாவை ஏன் கொலை செய்கிறார்கள்என்பதை திரைக்கதை எடுத்துச் சொல்கிறது. பேய் படம் என்றாலே இப்பொழுது ஹன்சிகாமோட்வானியைதான் தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஜீன்ஸ் பேண்டும் வெள்ளை நிற சட்டையுமாக வெண்ணிறபேயாக வருகிறார். அலாதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹன்சிகா.  இசையும் ஒளிப்பதிவும்படத்திற்கு பலம் சேர்க்கிறது.  பேயை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும். பயமுறுத்தும் காட்சிகள் படத்தில்நிறைந்து கிடக்கின்றன இரண்டு மணி நேரத்தை கழித்து விட்டு வரலாம்