“ரத்தனம்” திரைப்பட விமர்சனம்

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்திருக்கும் படம்  “ரத்தனம்”. இப்படத்தில் கதாநாயகனும் வில்லனும் ரவுடிகள். பொதுமக்களின் நன்மைக்காக பல் கொலைகளை செய்யும் ரவுடியாக விஷால் நடித்திருக்கிறார். விஷாலுக்கு உதவியாக ரவுடிசம் செய்யும் எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். ரவுடிசம் என்ற அச்சாணியில்தான் அரசியல் சுழல்கிறது என்பதை அழுத்தமாக  சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரி.  ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்த்னி கதைகளை சொல்லி அக்கிரகாரத்தில் போய் கதையை முடித்து,  தான் யார் என்பதை  அடையாளப்படுதிருக்கிறார் இயக்குநர் ஹரி.  ***********

விஷால் ஆக்‌ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கிறது. அவர் தனது பாத்திரத்திற்கு முழு நீதி செய்துள்ளார் மற்றும் அவரது முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். ப்ரியா பவானி சங்கர் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். முரளி சர்மா எதிரியாக கூர்மையானவர். சமுத்திரக்கனியும், யோகி பாபுவும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். எம் சுகுமாரின் கேமரா அதிரடிக் காட்சிகளை  சிறப்பாகப் படம்பிடித்துள்ளது, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை துடிக்கிறது