அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., 28.8.2019 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் (சென்னை பெருநகர காவல் எல்லை முடியும் இடம்) வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ANPR மறைகாணி கேமராக்களுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.


பின்னர், காலை 11.30 மணிக்கு, அக்கரை சோதனைச்சாவடி எதிரிலுள்ள ஜனராஜன் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், J-8 நீலாங்கரை மற்றும் J-12 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன திறன் கொண்ட 8 ANPR மறைகாணி கேமராக்கள் உட்பட 217 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்