அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 28.7.2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் திருவண்ணாமலை மாவட்ட பார்வையாளரும், ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  சீனிவாசன்  நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான வீரமணி, ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர் ரவி ஆகியோரும் உடனிருந்தனர்.