அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 19.08.2019 கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் பேசியதாவது.

தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிh;வாகம் மற்றும் வரவு செலவு குறித்த விபரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மிகத் துல்லியமாக நடத்த இயலும். பணியாளர்களை மிகச்சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் 9 இலட்சம் அரசுப்பணியாளர்கள் மற்றும் 8 இலட்சம் ஓய்வூதிய தியாகிகளும் பயனடைவார்கள். இத்திட்டம் மாநில கணக்காயர் அலுவலகம் வருமான வாpத்துறை இந்தியன் ரிசர்வ் வங்கி முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் மண்டல மாவட்ட மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் வாரியாக ஆய்வு நடத்தி இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த தேவையான இறுதிக் கட்டப் பணிகளை முடுக்கிவிடப்பட்டு துறை அலுவலர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 2882 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். தற்போது சீராக உள்ளது. மிக விரைவில் முழு வேகத்துடன் அனைத்து துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டம் கொண்டு வரப்படும். மதுரை மண்டலத்தில் 120075 மின் – பணிபதிவேடுகள் தொடர்பான பணிகளை 100 நிறைவு செய்ய முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து பணியாளகளுக்கும் எனது பாராட்டுகள் என அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் பேசினார்.