அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பட்டியின மக்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘அருந்ததியர்’ சமூக மக்கள் அழுத்தப்பட்டிருந்தனர். இந்த சமூக அநீதியை நீக்க உதவும் வகை யில் சிறப்பு ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக அருந்தததியர் சமூக அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர் சமூகப் பிரிவுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினர். இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் “அருந்ததியர் சமூகப் பிரிவுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்றும், இட ஒதுக்கீடு குறித்து கொள்கை முடிவு எடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் அருந்ததியர் பிரிவினருக் கான சமூக நீதியும், கொள்கை சார்ந்த முடிவுகள் மேற்கொள்ளும் மாநில உரிமைக் கொள்கை யும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கையில் கூறியுள்ளார்