ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார்.

இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா பாது காப்பு மையத்தில் 06.08.2020 அன்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையம்”-த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சாpக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிர மாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 36459 நபர்களுக்கு கொரோனா தொற்று பாpசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதில் 3483 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2089 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 424 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக 70 நபர்கள் மரணமடைந்துள்ளனர். மாவட்டத்திலுள்ள 2306 குக்கிராமங்களுள் 588 குக்கிராமங் களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 404 குக் கிராமங்களை சார்ந்தவர்கள் பூரண குணமடைந்து தற்போது அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதி களில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. 21 மருத்துவக்குழுக்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. நாளொன்றிற்கு சராசரியாக 900-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தற்போது இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையின் சார்பாக சித்த மருத்து வத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இம்மையங்கள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மூலிகைத் தேநீர் கபசுரக்குடிநீர் நிலவேம்புக்குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்தகைய தொடர் நடவடிக்கைகளின் மூலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் பொதுமக்கள் கூடுதல் பொறுப்புணர்வோடு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு தன்சுகாதாரம் பேணுதல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல் வேது பிடித்தல் (ஆவி பிடித்தல்) போன்று நடைமுறைகளை கடைபிடித்திட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகாpத்திட சத்தான உணவு வகைகள் பழங்கள் பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும் நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள் மிளகு இஞ்சி பூண்டு ஆகியவற்றை அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தொpவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் சித்த மருத்துவத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எம்.அல்லி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.கே.ராஜகுரு சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.சி.அஜித்பிரபுகுமார் (இராமநாதபுரம்) மரு.பி.இந்திரா (பரமக்குடி) மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) மரு.சிவானந்தவல்லி உட்பட அரசு அலுவலர்கள் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.