இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொளி குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி என்ற தலைப்பில் இசை காணொளி 16.8.2019 அன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த 09.03.2019 அன்று சைபர் கிரைம் மற்றும் வங்கி மோசடி குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வுகுறும்படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெளியிட, குறுந்தகட்டை திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் பெற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நல்ல இணைய பயன்பாட்டாளர்கள் நல்ல குடிமக்கள் என்ற பெயரில் சென்னை பெருநகர காவல் துறையுடன் இணைந்து முருகப்பா குழுமம் தயாரித்துள்ள இசைக் காணொளியானது சமூக வலைதளத்தையும் இணையதளத்தையும் பொறுப்புடன் கையாள்வது எப்படி என்பது குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இசைக் காணொளியின் பாடலை திரு.சுப்பு எழுதி தயாரித்திட திரு.மேட்லி ப்ளூஸ் இசையமைக்க நாட்டுப்புறப் பாடகர்களான திரு.அந்தோணிதாசன் மற்றும் திருமதி.சின்னபொண்ணு ஆகியோர் பாடியுள்ளனர். தற்போது பொதுமக்கள் சந்திக்கும் பெருமளவிலான இணையவழிக் குற்றங்களுக்கு காரணமாக விளங்கும் மூன்று முக்கியமான அம்சங்கள் இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன. · தனிநபர் விபரங்கள் மற்றும் முக்கியமான தகவல்கள் / புகைப்படங்களை பகிர்வதனால் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் அபாயங்கள் குறித்து அறியமுடியும். · பொதுமக்கள் தங்களது நிதி சம்பந்தப்பட்ட தகவல்கள் / கடவுச் சொற்கள் கடவு எண்கள் போன்றவற்றை ஒருபோதும் யாருடனும் பகிரக்கூடாது என்பதை அறிந்துகொள்ள இயலும். · இணையவழி மூலமாக வதந்திகளை பரப்புதல் வெறுப்பினை தூண்டுதல் போன்ற செயல்களில் &டவ;டுவதனால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள இயலும். இந்த விழிப்புணர்வு குறுந்தகடு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.க.விசுவநாதன், இ.கா.ப மற்றும் திரு.எம்.எம்.முருகப்பன், தலைவர், முருகப்பா குழுமம், ஆகியோரால் 16.08.2019 அன்று வெளியிடப்பட்டது.