இராமநாதபுரம் மாவட்டம் பருவமழை காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு வைத்திடவும் முறையே விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழுள்ள உரம் விற்பனை நிலையங்களில் 05.11.2019 அன்றி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் நேரிடையாகச் சென்று உரம் விற்பனை மற்றும் கையிருப்பு குறித்து திடீர் ஆய்வு செய்தார். குறிப்பாக இராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள இராதாகிருஷ்ணன் என்ற தனியார் உரம் விற்பனை நிலையம் மற்றும் வண்ணாங்குண்டு கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரிடையாகச் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொpவித்ததாவது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 384.41 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் மழைநீர் பெருகி வரு கின்றது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற மழையினை பயன்படுத்தி மாவட்டத்தில் விவசாயிகளின் மூலம் ஏறத்தாழ 1.20 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வேளாண்மைப் பணிகளுக்கு அத்தியாவசிய தேவையான வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 250 உர விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்க வேளாண் மை கூட்டுறவு சங்கங்களின் கீழ் 134 உர விற்பனை நிலையங்களும் 116 தனியார் உர விற்பனை நிலையங்களும் அடங்கும். இதுதவிர உரம் உரிமம் பெற்ற 17 சில்ல ரை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தேதியில் 688 மெ.டன் அளவில் யு+ரியா 1848 மெட்ரிக் டன் அளவில் டி.ஏ.பி 308 மெ.டன் அளவில் பொட்டாஷ் 2714 மெ.டன் அளவில் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 5558 மெ.டன் அளவில் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதத்திற்கு மொத்தம் 11025 மெ.டன் அளவில் யு+ரியா தேவை என கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உரம் கையிருப்பு மற்றும் உரங்களின் விலை குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக வெளிப்படைத் ன்மையுடன் அறிவிப்பு பலகை அமைத்திட வேண்டும். மேலும் உரங்கள் சாpயான விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள உரம் விற்பனையாளர் மற்றும் வசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பருவமழை காலத்தில் தேவையான உரம் இருப்பு வைத்திடவும் விவசாயிகள் சிரமப்படாத வகையில் உரிய முறையில் விநியோகம் செய்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.எஸ்.எஸ்.சேக் அப்துல்லா வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.பி.ஜி.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.