உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் தேவிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் 21.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ். இ.ஆ.ப. அவர்கள் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பங்கேற்று கடலோரப் பகுதிகளில் சுற்றுப்புறத் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். மனிதர்களின் வளமான வாழ்விற்கு இயற்கை வளங் களை பாதுகாத்து பராமரிப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக கடலும் கடல் சார்ந்த பகுதிகளை அவற்றின் வளமை பாதிக்காமல் பாதுகாப்பது நமது கடமை யாகும். அதன்படி கடல் வளத்தினை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக செப்டம்பர் 21- ம் நாளை ‘உலக தூய்மை தினமாக” கடைபிடித்து சுற்றுப்புற சுகாதார மேம்பாடு நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் 21.09.2019 அன்று தேவிப்பட்டிணம் விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். இப்பேரணியில் இராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த 23 பள்ளிகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இப்பேரணியானது விவேகானந்ர் பள்ளி வளாகத்திலிருந்து துவங்கி தேவிப்பட்டிணம் அருள்மிகு நவபாசாணம் நவ கிரஹ திருக்கோயில் கடற்கரைப் பகுதியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து பேரணி யில் பங்கேற்ற அனைவரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ மாணவிகளிடையே பேசுகையில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் இந்திய அளவில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ‘தூய்மையே சேவை இயக்கம்” திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். அதேபோல மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் மக்கள் நலனுக்காக சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டினை உறுதி செய்திடும் நோக்கில் 01.01.2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாகவும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றான உபயோகப் பொருட்களை பயன்படுத்திட ஊக்குவித்திடும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக நடத்தப்படும் இந்த கடற்கரை தூய்மைப்படுத்துதல் நிகழ்ச்சி யானது பாராட்டுதற்குhpயது. மாணவ மாணவியர்கள் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிவதோடு தங்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தாhpடத்திலும் எடுத்துரைத்திட வேண்டுமென பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் திருமதி.தமிழ்செல்வி பாரத சாரண சாரணியர் இயக்க செயலர்கள் திரு.சிவ.செல்வராஜ் (இராமநாதபுரம்) திருமதி.மகாலெட்சுமி (மண்டபம்) திருமதி.காமாட்சி (மாநில பிரதிநிதி) உட்பட பள்ளிகளில் தாளாளர்கள் முதல்வர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.