குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி.

இராமநாதபுரம், ஜூலை, 6- இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி
அவரது தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் உயிரிழந்த அச் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் ஒரு லட்சம் நிவாரணத் தொகைக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், என்னுடைய நாடாளு மன்றத் தொகுதிக்கு ட்பட்ட பகுதியில் இந்த கொடுங்குற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு உரிய நீதி பெற்று தரவும, இதுபோன்ற கொடுஞ் செயல்களுக்கு நிரந்தர முற்றுப் புள்ளியாக அரசு விரைந்து செயல்பட தொடர்ந்தும் வலியுறுத்துவேன் என்ற உறுதியையும்
குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இக்கொடுங் குற்றத்தைச் செய்த மனிதத் தன்மையற்ற கொடூரர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் கேள்வி எழுப்ப உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
என கூறினார்.