கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி

ஜோனதன் பிரான்சிஸ் (வயது-53), காவல் ஆய்வாளர் சென்னை, அடையாறு, மருதம் வளாக த்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் கடந்த 18.8.2020 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 24.8.2020 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக காவல்துறை தலை மை இயக்குநர் திரிபாதி,இ.கா.ப., தமிழக கமாண்டோ (ஆபரேஷன்ஸ்) கூடுதல் காவல் இயக்குநர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., கூடுதல் காவல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி,இ.கா.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., 25.8.2020 அன்று காலை, மருதம் கமாண்டோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மறைந்த காவல் ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து கமாண்டோ பள்ளி அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்திய பின் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கொரோனா நோய் தொற்றால் மறைந்த காவல் ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் 1988ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு பாலின் ஷியாமலா என்ற மனைவியும், கென்னட், வ/25 மற்றும் கெவின், வ/22 ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.