கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டாக் மஹிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை காவல் ஆணையரக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் (Dry Ration Kit) அடங்கிய தொகுப்பினை வழங்க கோட்டக் மஹிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் முன்வந்தது. அதன்பேரில், மேற்படி ஆயுள் காப்பீடு நிறுவனம் சார்பில் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 04.7.2020 அன்று காலை, காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இத்தொகுப்பில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், மிளகாய் தூள், கோதுமை, மைதா, மிளகு, டீத்தூள் ஆகிய பொருட்கள் உள்ளது. இந்நிகழ்ச்சியில், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., மருத்துவர் எம். சுதாகர், கோட்டாக் மகிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் மண்டல துணை தலைவர் (Zone Vice-President) திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.