சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.08.2020 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம். மணிகண்டன் (இராமநாதபுரம்) என்.சதன்பிரபாகர் (பரமக்குடி) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலை மையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூகநலத் துறையின் மூலம் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண் கல்வியினை ஊக்குவித்திடும் நோக்கில் படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவித்தொகை மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சத்து ணவு திட்டத் துறையின் கீழ் ஏறத்தாழ 1 இலட்சத்து 10 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள இக் காலகட்டத்தில் இப்பணியாளர்கள்; அனைவரும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கி ணைந்து நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியாளர்களின் அயராத உழைப்பு மிகுந்த பாராட்டுதலுக் குரியது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத் தினை வீட்டிலேயே வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இராமநாத புரம் மாவட்டத்தில் 28937 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 18000-க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் வருவாய் வட்டங்கள் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.667 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் சீறிய முயற்சியினை தமிழகத்தில் செங்கல் பட்டு மாவட் டத்தில் முட்டுக்காடு திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி மதுரை மாவட் டத்தில் புதுப்பட்டி என 3 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு திறன் பயிற்சி வழங்கிட ஏதுவாக ஒருங்கிணைந்த தேசிய மாற்றுத் திறனாளிகள் திறன் மேம்பாட்டு மையம் அமைப் பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ 29 இலட்சத்து 50 ஆயிரம் நபர்கள் ஆதரவற்ற முதியோர்கள் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆய்வுக்கூட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத் திட்டங்களின் செயல்பாடுகள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போக்ஷோ சட்டம் நடைமுறை குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போஷன் அபியான் திட்டம் செயல்பாடுகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பாக 5 ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சத்துமாவு தொகுப்புகளையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவகாமி இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர். சுகபுத்ரா பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேலு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஷ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) வைஜெயந்தி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.