சல்மான் கானின் “தபாங் 3” பத்திரிக்கை சந்திப்பு!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது. தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். படம் தமிழ் மொழியில் வெளியாவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். சல்மான்கான் பேசியதாவது… “வாண்டட்” படத்தின் ஷீட்டிங் ஒரு மாதம் இங்கு சென்னையில் நடந்தது. அப்புறம் சீயான் விக்ரமின் சேதுவை ரீமேக் செய்து நடித்திருக்கிறேன். எப்போதும் தென் னிந்திய படங்களை ரிமேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. நடிகராக மாறு வதற்கு முன்பு ஒரு விளம்பரபடத்திற்காக இங்கு வந்திருக்கிறேன். சென்னை பற்றி நிறைய நல்ல நினைவுகள் உள்ளது. எனக்கு பிரபுதேவாவை பற்றி தெரியும் அவர் வேலை செய்யும் விதம் எனக்கு பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார், ஹீயு மர் செய்ய வைப்பார். அதனால் இந்தப்படத்திற்கு அவர் இருந்தால் நன்றாக இருக்கு மென்று நினைத்தோம். அவர் மிகவும் நல்ல மனிதர். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன். சுல்புல் ஃபாண்டே பற்றி கூறும்போது அவனுக்கு அவனது குடும்பம் தான் முக்கியம். இந்தப்படத்தின் கதை முதல் பாகத்திற்கு முன்னர் நடந்த கதையை சொல்லும். சுல்புல் ஃபாண்டே எப்படி சுல்புல் ஃபாண்டேவாக மாறினான் எனும் கதை இது. இது இந்த தொடரை முழுமைப்படுத்தும் படமாக இருக்கும். இந்தப்படத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் வேலை செய்திருக்கிறார்கள். இது உங்கள் படம். அங்கு இப்போது நிறைய தமிழ் படங்கள் வெற்றி பெறுகிறது. ரஜினி, கமல், விக்ரம் படங்கள் அங்கே பெரிய வெற்றி பெறுகிறது. எங்களது படங்களையும் தமிழில் ரசிக்கிறார்கள் தபாங் இங்கு வெற்றியடையும் என நம்புகிறேன். சுதீப் பேசியதாவது… பிரபுதேவா டான்ஸ் சொல்லித்தராமல் இயக்கம் செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. ஏனென்றால் எனக்கு அதுதான் சுலபம். அவர் மாதிரி நடனமாட முடியாது. அப்படியும் அவர் விட வில்லை இயக்குநராக அவர் கச்சிதமாக வேலை செய்பவர். அவருக்கு என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார். அவர் நினைத்ததை சரியாக எடுத்து விடுவார். இந்தப்படத்தில் அனைவரும் கடுமையான உழைப்பை தந்துள்ளார்கள். அனல் அரசுவின் ஆக்‌ஷன் அதகளமாக இருக்கும் என்றார். பிரபு தேவா பேசியதாவது… இந்தப் படம் செய்ய முடிவான போது என்னை இயக்குவதற்கு அழைத்தார் சல்மான். படம் ஆரம்பிக்கும்போதே இதை நான்கு மொழிகளிலும் செய்யலாம் என்று சொல்லிவிட்டார். அப்போது முதலே அதற்காக உழைத்தோம். இது அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் கதை எல் லோருக்கும் பிடிக்கும் என்றார் ஹீரோயின் மாஹி கில் பேசியதாவது…. நான் இப்படி ஒரு மிகப்பெரிய படத்தில் அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளேன். தமிழில் வெளியாவது இன்னும் பெரு மகிழ்ச்சி. வரும் காலங்களில் தமிழில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். தயாரிப்பாளர் கோட்டாப்பாடி J ராஜேஷ் பேசியதாவது… டிசம்பர் 20 எங்களுக்கு முக்கிய நாள் “ஹீரோ, தபாங் 3“ இரண்டையும் தமிழில் ரிலீஸ் செய்கிறோம். தபாங் 3ஐ பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறோம். இது தமிழ் படம் போலவே இருக்கும். சல்மான் கான் எம். ஜி. ஆர் டயலாக் பேசியுள்ளார். பிரபு தேவா சல்மான் இந்த இரண்டு பெயரே போதும் படம் வெற்றி பெறும் என்றார்.