சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று மும்பையில் நடைபெற்ற அகில இந்திய ஹஜ் ஆய்வரங்க மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வோருக்கு மானியம் தரும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான் என்றும் தெரிவித்தார்.
இந்திய ஹஜ் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கம் மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸில் நடைபெற்றது. இதில் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் டாக்டர்.அசூப், இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள். இவர்களுடன் ஹஜ் அமைப்பின் தலைவர்கள், செயல் அதிகாரிகள், வெளியுறவு துறை, சிறுபான்மை யினர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அபூபக்கர் பேசும்போது, இஸ்லாமியர்கள் மீது கொண்டுள்ள பற்று, பாசம் காரணமாக தமிழக அரசு ஹஜ் பயணத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மானியம் அளித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே இத்தகைய மானியம் தரும் ஒரே அரசு தமிழகம் மட்டும் தான் என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய, சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் அசூப்,வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் ஹாஜிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். 2019 ஆம் ஆண்டு ஹஜ்ஜிக்கு சென்ற ஹாஜிமார் களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் குறைபாடுகள் இருந்தன என்று அறியப்பட்டது. ஆதாலால் 2020 ஆண்டு ஹஜ்ஜிக்கு செல்லும் ஹாஜிமார்களின் நிறைந்த வசதிகள் செய்து தரும் வகையில் ஏர் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும் கூறினார். அத்துடன் சவுதியில் செயல்படும் இந்திய நிறுவனமான ஓஐஓ என்ற நிறுவனத்தின் உதவியோடு ஹாஜிமார்கள் நட்சத்தர விடுதி வசதிகளுடன் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக அளவு இஸ்லாமியர்களை பயணம் செல்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2019 ஹஜ்ஜிக்கு அயராது உழைத்த பிரதம அலுவலகம் மற்றும் சிறுபான்மை அமைச்சகத்திற்கும் இந்தியாவில் வாழும் 30 கோடி இஸ்லாமியர்களின் சார்பாகவும் இந்திய ஹஜ் அசோஷியேசன் சார்பாகவும் தனது நன்றியையும் பிரசிடெண்ட் அபுபக்கர் தெரிவித்தக் கொண்டார்.