சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளியுடன் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவ தாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா ளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேற்படி புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் அறிவுரையின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் சரவணகுமார், வங்கி மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் S.பிரபாகரன், ஆய்வாளர் R.புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் A.வீரச்சாமி, N. சுரேஷ்குமார், S.முனீர் தலைமைக் காவலர்கள் P.ஜெகநாத் (தா.கா. 19917), M.ஸ்டாலின் ஜோஷ் (தா.கா. 43311) N.பாலசுப்பிரமணியன் (த.கா. 25863) முதல் நிலைக் காவலர் வளர்மதி (மு.நி.கா 36648), முதல் நிலைக் காவலர் N.சந்தோஷ் பெருமாள் (மு.நி.கா.27987) ஆயுதப்படை காவலர்கள் T.முத்து (கா.எண்.52092) செல்வி M.திவ்யா, (கா.எண்.52128) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் மேற்படி புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு, பொதுமக்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி வந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில், தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்ட 1.தியாகராஜன், வ/38, த/பெ.ராமசாமி, சேலம், 2.கோபிநாத், வ/28, த/பெ.வெங்கடேசன், சைதாப் பேட்டை, 3.மணிபாலா, வ/22, த/பெ.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் ஆகிய 3 பேரை கடந்த 09.7.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் குற்றவாளிகள் 3 பேரும் திரு வான்மியூர், எல்.பி. சாலை மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் போலியான கால் சென்டர் நடத்தி, பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், எங்களது இன்சூ ரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்தக் கூறி பணத்தை பெற்றுக் கொண்டு கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் குற்றவாளி தியாகராஜன் என்பவர் இதற்கு முன்பு சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்சில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டு கைதான பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வா (எ) செல்வகுமார் என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஆவார். மேலும் கைது செய்யப்பட்ட தியாகராஜன் கடந்த அன்று 24.07.2020 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டில் மட்டும் இதுவரை போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் 121 புகார்கள் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்து, 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி இழந்த தொகை ரூ. 68, 67,240/- ஆகும்.

2. யானைக்கவுனி பகுதியில் சாலையில் 4 கிலோ வெள்ளியுடன் கிடந்த பையை எடுத்த நபர் நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னை, ராயப்பேட்டை, நாயுடு அய்யாபிள்ளை தெரு, எண்.7, என்ற முகவரியில் ஆதில் பாஷா, வ/42, த/பெ.நூருல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 08.08.2020 அன்று இரவு 8.45 மணியளவில் ராயப்பேட்டை யிலிருந்து, செங்குன்றத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது வழியில் சென்ட்ரல், வால்டாக்ஸ் ரோட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த பேக்கை எடுத்து திறந்து பார்த்த போது அதில் உருக்கிய வெள்ளி இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் ஆதில் பாஷா பையில் இருந்து மெடிக்கல் பில்லில் இருந்த செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு சாலையில் கிடந்த பைபற்றி தகவல் தெரிவித்துள்ளார். பையை தொலைத்த நபர் சுபாஷ் ஜானா, வ/48, த/பெ.நேயை ஜானா என்பவர் தான் சி-2 யானைக் கவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் அங்கு வந்து மேற்படி பையை ஒப்படைக்கும் படி , ஆதில் பாஷாவிடம் கூறியுள்ளார். உடனே ஆதில் பாஷா நேர்மையுடன் மேற்படி வெள்ளி அடங்கிய பையை சி-2 யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சி-2 யானைக்கவுனி போலீசார் விசாரணை செய்து மேற்படி 4 கிலோ உருக்கிய வெள்ளி அடங்கிய பையை அதன் உரிமையாளர் சுபாஷ் ஜானா, வ/48, த/பெ.நேயை ஜானா, எண்.22/1,
பட்டாளம், பெரம்பூர், பேரக்ஸ் ரோடு, சென்னை என்பரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த மேற்படி காவல் அதிகாரிகள், ஆளிநர் கள் மற்றும் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளி அடங்கிய பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 10.8.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.