சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது. ரூ. 12,90,000/-பறிமுதல். சென்னை, எம்.கே.பி.நகர், ராஜீவ்காந்தி 19வது தெரு, எண்.58 என்ற முக வரியில் வசிக்கும் முகமது அபுபக்கர் சித்திக், வ/34 த/பெ.அப்துல்காதர் என்பவர் தனியார் பணபரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12.12.2019 அன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அலுவலகத்தை பூட்டி விட்டு, நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.17,91,000/-ஐ உரிமையாளர் திரு.அனிஸ் வீட்டில் ஓப்படைப்பதற்காக, சகஊழியர் திரு.அப்துல்காபர் என்பருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் 2வது வடக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, 5 இருசக்கர வாகனங்களில் அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள் மேற்படி நிறுவனத்தின் ஊழியர்கள் முகமது அபுபக்கர் சித்திக் மற்றும் அப்துல் காபரை வழிமறித்து மிரட்டிஅவர்களிடமிருந்து மேற்படி பணம் ரூ.17,91,000/-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து முகமது அபுபக்கர் சித்திக் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.G.அம்பேத்கார், தலைமைக்காவலர்கள் திரு.V.பழனி (தா.கா.17957), திரு.K.M.பாஸ்கர் (29487) முதல்நிலைக்காவலர்கள் திரு.G.பரசுராமன் (மு.நி.கா.28893) மற்றும் திரு.வினோத்குமார் (மு.நி.கா.31479) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த பல சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி நிறுவனத்தில் வேலை செய்து வரும் 1.தமிமுன் அன்சாரி, வ/19, த/பெ.சம்சுபக்ரீதின், நேதாஜி நகர், தண்டையார்பேட்டை, 2.ரமேஷ், வ/27, த/பெ.ஆறுமுகசாமி, தண்டையார்பேட்டை 3.வடிவேல், வ/29, த/பெ.சேகர், பழைய வண்ணாரப்பேட்டை, 4.மேகநாதன், வ/27, த/பெ.பக்கிரிசாமி, தண்டையார்பேட்டை 5.பார்த்திபன், வ/29, த/பெ.தியாகராஜன், தண்டையார்பேட்டை 6. கிரிதரன், வ/19, த/பெ.முனுசாமி, தண்டையார்பேட்டை 7.சுரேஷ், வ/28, த/பெ.அருணாசலம், கொடுங் கையூர் 8.வாசுதேவன், வ/21, த/பெ.ஏழுமலை, தண்டையார்பேட்டை 9.வசந்தகுமார், வ/28, த/பெ.மனோகர், கொருக்குப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளங்சிறார்கள் 2 பேர் ஆகிய 11 நபர்களை கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ.12,90,000/- மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ரமேஷ் என்பவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை செய்த C-2 யானைகவுனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.D.ராஜகுமார், தலைமைக்காவலர்கள் திரு.S.A.முகமது யாகியா, (த.கா.18231), திரு.S.கெளரிசங்கர், (த.கா.26817) மற்றும் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.G.அம்பேத்கார், தலைமைக் காவலர்கள் திரு.V.பழனி (த.கா.17957), திரு.K.M.பாஸ்கர் (த.கா.29487), முதல்நிலைக் காவலர்கள் திரு.G.பரசுராமன் (மு.நி.கா.28893), திரு.வினோத்குமார் (மு.நி.கா.31479) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 30.12.2019 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங் கினார்.