ஜப்பானிலும் யுரேசியாவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள்  சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு உலக திரைப்பட விழாக்களில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள், 
 
தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் Fukuoka உலக திரைப்பட விழாவிலும் யுரேசியாவில் நடைபெறும் மாபெறும் உலக திரைப்பட விழாவிலும் இயக்குனர் வஸந்த் எஸ் சாயின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது! உலக திரைப்பட விழாவில் கொண்டாடப்படும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
 
வீடியோவை பார்க்க
 
 இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து  மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.  எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.   
 
Twitter Id
@VasanthSsai
@sreekar_prasad
#ParvathyThiruvothu
@LakshmiPriyaaC
@actorkaruna
@sunderramu
@vaali_mohandas
@karthickkrishna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *