சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா தொற்று பரவால் மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலால் புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருக் கிறது. சி.பி.எஸ்.இ பாடங்களை குறைப்பதாக கூறி அப்பாட திட்டத்தில் உள்ள அரசியல் அறிவியல் (Political Science) படத்திலிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை (Secularism) ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் , “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்?  இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி  ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது. அறிவியல் மற்றும் கலைப்புலப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கவும் முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இதுபோன்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எதிர்காலத் தலைமுறையின ரின் பல்வேறு மதம் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து வாழும் இந்தியாவில் மதச்சார் பின்மை செழுமையூட்டக்கூடிய பண்பு என்பதையும் மதச் சார்பின்மை’- இந்தியாவின் மகத்தான அடையாளம் என்பதை மறக்கடிக்கும் நோக்கத்திலும் கூட்டாட்சி மற்றும் குடியுரிமை சட்டங்கள் நாட்டிற்கு எதிரானவை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி ஒரே நாடு ஒரே மொழி, ஒரே மதம் ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை மாணவர்கள் மனதில் திணிக்கவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய பாஜக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் உலக அளவில் போட்டியிடு வதற்கான நமது திறனையும் குறைத்துவிடுவது மட்டுமல்லாமல் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் பிஞ்சுகள் மனதில் வெறுப்புணர்வு எனும் நஞ்சை கலக்கும் செயலாகும். எனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தனது முடிவை உடனே திருப்ப பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன். என்று ஜவாஹிருல்லா  கூறியுள்ளார்.