சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுமென்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாக செம்மல்களை சிறப்பிக் கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 16,000 ரூபாயிலிருயது 17,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 8,000 ரூபாயிலிருயது 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் முழு ஆரோக்கியத்துடனும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்வதற்காக பொருளாதார, சமூக, சட்ட ரீதியாக உங்களின் அரசு, துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது மக்களுக்கான அரசாக, மக்களுடன் என்றென்றும் இணையதிருக்கும் என்பது உறுதி. உங்களின் அன்பையும், ஆதரவினையும் பெற்றுள்ள நான், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அல்லும் பகலும் உங்களுக்காக தொடர்யது உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று இந்த நன்னாளில் நான் மீண்டும் உறுதிபட கூறுகிறேன். இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உலக மக்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் பிடியிலிருந்து அனைவரும் விரைவில் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்நன்நாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின நல் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன். என்று தனது சுதந்திரதினநாள் உரையில் முதல்வர் பழனிச்சாமி கூறினார்.