சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி 1.இம்ரான் (எ) இம்ரானுதீன், வ/31, த/பெ.ரகிமுதீன், எண்.53/20, யானைகவுனி குளம் 2வது தெரு, ஐஸ்அவுஸ் என்பவர் மீது நு-
2 இராயப்பேட்டை காவல் நிலையத்திலும், 2.குமார், வ/29, த/பெ.முருகன், எண்.4/67, மங்களேரி, திருவான்மியூர் 3.பிரபா (எ)பிரபாகரன், வ/24, த/பெ.தணிகாச்சலம், எண்.21, 10வது குறுக்கு தெரு, சிங்கராவேலன் தெரு, சின்ன நீலாங்கரை குப்பம் ஆகியோர் மீது நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவிலும், 4.சுந்தர், வ/30, /பெ.அந்தோணிதாஸ், எண்.33/42, குடிசைமாற்று வாரியம், பெரும்பாக்கம் என்பவர் மீது து-10 செம்மஞ்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவிலும் 5.சரவணன், வ/28, த/பெ.சுப்பிரமணி, எண்.30, அன்னைசத்யா நகர், பம்மல் என்பவர் மீது ளு-6 சங்கர்நகர் காவல் நிலைய குற்றப்பிரிவிலும் 6.சசிதரன், வ/47, த/பெ.கண்ணன், எண்.25/28, மேற்கு மாதா கோயில் தெரு, குஜராத்தி காலனி, ராயபுரம் என்பவர் மீது விபச்சார தடுப்பு பிரிவிலும் 7.தங்கப்பாண்டி, வ/24, த/பெ.மூர்த்தி, எண்.25, விவேகானந்தா தெரு, மூலக்கடை, மாதவரம் என்பவர் மீது ஆ-5 எண்ணூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, குற்றவாளிகள் 7 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 7 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (06.8.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படிகுற்றவாளிகள் 7 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் இம்ரான் (எ) இம்ரானுதீன் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குமார் மற்றும் பிரபாகரன் மீது சங்கிலி பறிப்பு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில், குமார் ஏற்கனவே 2 தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுந்தர் மீது வயதான நபர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடியது தொடர்பாக சுமார் 5 வழக்குகள் உள்ளது. சரவணன் மீது இருசக்கர வாகனங்கள் திருடியது தொடர்பாக பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தங்கபாண்டி மீது ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு தடைவ குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.