சென்னை நகர ஊரடங்கையொட்டி கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை ஆணையர அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் அமைந்தகரை , அண்ணா ஆர்ச் அருகில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 05.07.2020 அன்று அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே
காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.R.தினகரன், இ.கா.ப, (பொறுப்பு வடக்கு) போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) திருமதி.S.லட்சுமி, இ.கா.ப (பொறுப்பு மேற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு), போக்குவரத்து இணை ஆணையாளர் (வடக்கு) திருமதி.M.V.ஜெயகௌரி, இ.கா.ப, காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையாளர் திரு.P.சாமிநாதன், இ.கா.ப (பொறுப்பு அண்ணா நகர் காவல் மாவட்டம்) மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (மேற்கு) திரு.M.M.அசோக்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.