சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலர் ஆயுதப்படையில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.யு.சுபாஷ் (வயது 24) என்பவர் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் பணிக்கு வரும்போது இரயில் விபத்தில் இறந்துவிட்டார். இவர;  ஹஜ்.டி.எப்சி. வங்கியில் சம்பளக் கணக்கு வைத்து சம்பளம் பெற்று வந்தார். இந்த வங்கி சம்பளக் கணக்கு வைத்துள்ள காவலர;களுக்கு வழங்கும் சலுகைகளின் படி இவருக்கு விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.30 இலட்சம் வழங்க வங்கி துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் ஏற்பாடு செய்தார். மேற்படி காவலர் திருமணமாகாதவர். இவரின்; குடும்பத்தில் வயதான தந்தை திரு. ஆதிசேசன்வரதராசு (விவசாயம்) ரூபவ் தாயார் திருமதி.வள்ளி மற்றும் தம்பி விக்னேஷ் (வயது 21) உள்ளனர். 10.08.2019 சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
திரு.அ.கா.விசுவநாதன இ.கா.ப. அவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து ரூ.30 இலட்சத்திற்கான வங்கி கசோலையை இறந்து போன காவலர் திரு.யு.சுபாஷின் தகப்பனார் திரு.ஆதிசேசன்வரதராசு அவர்களிடம் வழங்கினார். இதை பெற்றுக் கொண்ட இறந்துபோன காவலரின் தந்தை திரு.ஆதிசேசன் வரதராசு துரிதமாக விபத்து காப்பீட்டு தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்த காவல் ஆணையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு தனது குடும்பத்தினர் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்தார்.