செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக் கைகளை அமலாக்கி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பெருவணிகக் குடும்பங்களுக்கு ஆதரவான அவசர சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. இந்த நிலையில் மக்கள் வாழ்க்கை பாதுகாப்புக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செப்டம்பர் 2, 3, 4 தேதிகளில் வீடு, வீடாக துண்டறிக்கை விநியோகிப்பார்கள். இந்தப் பரப்புரையை தொடர்ந்து, 04.09.2020 ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தி கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். கோரிக்கைகள்

1. கடும் நெருக்கடியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, தொழில்களை தொடர்ந்து நடத்த அவர்களது தேவைகளுக்கேற்ப குறைந்த வட்டியில் நிபந்தனைகளை தளர்த்தி கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். 2. கொரோனா கால நெருக்கடியால் விவசாயிகள் அறுவடை செய்த விளை பொருட்களை சந்தைப்படுத்திட முடியா மல் பெரும் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், விவசாயிகள் பெற்றுள்ள வங்கி கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 3. கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப் படும் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி தொழிலாளர்களின் தின ஊதியத்தை 600ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இத்திட்டத்தை விவசாய வேலைகளுக்கும், பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 4. நகர்புறத்தில் வேலையில்லாமல் தவித்து வரும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க புதிய நகர்புற வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். 5. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்த தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு ள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிவியல் சார்ந்த நவீன கல்வியை நிராகரித்து மனுதர்ம வழி யிலான குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் கொண்டிருப்பதால் இதனை தமிழ் நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். 6. விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிராக மத்திய அரசு அறிவித்துள்ள கீழ்க்கண்ட சட்டங்களை

1. மின்சார திருத்த மசோதா – 2020. 2. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 3. விவசா யிகள் ‘அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு’ விலை உத்தரவாதம் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம் – 2020. 4. வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் 5. சுற்றுக் சூழலி யல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை – 2020 ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 7. கொரோனாவின் நெருக்கடி காலத்தில் உயர்த்தப்பட்ட நிலஅளவை கட்டணங் களை ரத்து செய். 8. தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விவ சாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை வழங்க நடவடிக்கை எடு. 9. கொரோனா நெருக்கடி காலத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனுமதிப்பது போல் எதிர்கட்சிகளின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடு. 10. ஜனநாயக உரிமைகளை மறுத்து காவல் துறை போட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறு. 11. நிவாரண நிதி வழங்குக கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 4 மாதங்கள் முடிந்து விட்டன. இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் இழந்துள்ள மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு வருமான எல்லைக்கு வெளியே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000மும், புலம்பெயர்ந்த அமைப்புசார தொழிலா ளர் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500ம் நிவாரண நிதி வழங்க வேண்டுமென கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 12. உள்ளாட்சி அதிகாரங்களை பறிக்காதே நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை தமிழ்நாடு அரசு இடைமறித்து அதிகாரவர்க்கத்தின் மூலம் செயலாற்றி வருகிறது. இது அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும். இந்த ஜனநாயக விரோத செயலை உடனடியாக கைவிட்டு உள்ளாட்சி அமைப்புகள் முழு அதிகாரத்துடன் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

13. தாலிக்கு தங்கம் வழங்குக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கருப்புப் பண பதுக்கலே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இவை களை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தங்கம் விலை உயர்வின் காரணமாக அடிதட்டு, நடுத்தர மக்கள் உட்பட பெரும் பகுதியினர் மோசமாக பாதிக்கப்படுகின் றனர். வாழ்க்கை முறையில் தாலி அணிவது, காதணி, மூக்குத்தி போடுவது போன்ற குறைந்த பட்ச தேவைக்காவது தங்கம் வாங்கும் பண்பாட்டு வழக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு, வரு மான வரி எல்லைக்கு வெளியே உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் தாலிக்கு தங்கம் வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 14. அந்நிய வெளிநாடு களில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, நாட்டு மக்களுக்கு தலா ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதியளித் திருப்பதன்படி கொரோனா நெருக்கடி காலத்திலாவது கருப்புப் பணத்தை மீட்டு வந்து மக்களுக்கு உதவ வேண்டும் என மத்திய அரசையும், பிரதமரையும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 15. முழு மையான போக்குவரத்திற்கு இரயில் உட்பட ஏற்பாடு செய்க! 16. 144 தடை உத்தரவை திரும்ப பெறு. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பரப்புரை இயக்கக்தையும், ஆர் பாட்ட த்தையும் அனைத்து பிரிவு மக்களும் ஆதரிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.