தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர் முயற்சியால் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி அருகில் செயல்பட்டு வரும் கல்வி டிரஸ்ட் வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்ப தற்கான இடத்தினையும் தேனி வட்டத்திற்குட்பட்ட தாடிச்சேரி கிராமத்தில் புதிய அரசு கால் நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடத்தினையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 04.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சி.பாலசந்திரன் மற்றும் பதிவாளர் முனைவர் பா.டென்சிங் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை யில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விக்குப்பின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்ததாவது:

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூhp மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத் திட தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்; அறிவிக்கப்பட்டது. பல்வேறு உயரிய கால் நடை இனங்களை தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழகத்தில் காங்கேயம் பர்கூர் உம் பளச்சேரி ஆலம்பாடி மற்றும் புலிக்குளம் ஆகிய ஐந்து வகையான மாட்டினங்களையும் சென் னை சிகப்பு மேச்சேரி திருச்சி கறுப்பு கோயம்புத்தூர் வெள்ளை நீலகிரி வேம்பூர் கீழக்கரிசல் செவ் வாடு மற்றும் கச்சக்கட்டி கறுப்பு ஆகிய பத்து செம்மறி ஆட்டினங்களையும் கன்னி கொடி மற்றும் சேலம் கறுப்பு ஆகிய மூன்று வெள்ளாட்டினங்களையும் கோம்பை சிப்பிப்பாறை கன்னி மற்றும் ராஜபாளையம் ஆகிய நான்கு நாய் இனங்களையும் கொண்டுள்ளது. கால்நடை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் (2019 ஆண்டுக்கான கால்நடை கணக்கெடுப்பு தரவுகளின்படி) 110275 மாடுகள் 1423 எருமைகள் 47699 செம்மறி ஆடுகள் 95388 வெள்ளாடுகள் மற்றும் 809 பன்றிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றி யம் அதற்குட்பட்ட பால் குளிரூயஅp;ட்டும் நிலையம் மற்றும் 215 மேற்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் மூலமாக இந்த மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1.50 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு கால்நடை வளத்தில் சிறந்து விளங்கும் தேனி மாவட்டத்தில் கால்நடை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கும் கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழக அரசு ஆறாவது கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத் தில் ரூ.265.00 கோடி செலவில் நிறுவுவதாக அறிவித்து அதில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டி ற்கு ரூ.94.72 கோடிக்கான நிதியினை ஒதுக்கீடு செய்து உத்தவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது சென்னை (1903) நாமக்கல் (1985) ஒரத்தநாடு (2011) திருநெல்வேலி (2011) மற்றும் சேலம் (2020) ஆகிய ஐந்து கால்நடை மருத்தவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்த வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படுவதால் அண்டை மாவட்டங்களான மதுரை விருதுநகர் மற்றும் திண்டுக்கலிலுள்ள கால்நடை மற்றும் கோழியின பண்ணையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட இயலும். மேலும் இக்கல்லூரி அமைய வுள்ள இடம் கேரள மாநில த்தின் எல்லையாக இருப்பதால் பால் இறைச்சி மற்றும் முட்டை பதப் படுத்துவதற்கும் விற்ப னை செய்வதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் தற்சமயம் அரசு கால்நடை கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு தேனி மாவட்டத்தில் தனியார் கட்டடம் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் 2020-21-ஆம் கல்வி யாண்டிற்கான 40 மாணவ மாணவியர்கள் சேர்க்கை நடைபெற அரசால் அறிவுறுத்தப் பட்டு பெரியகுளம் வட்டத் திற்குட்பட்ட தேவதானப் பட்டி அருகில் கல்வி டிரஸ்ட் என்ற தனியார் கட்டத்தில் தொடங்கிட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இக்கல்லூரி கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவ சாயிகள் மற்றும் தொழில் முனை வோரின் தரமான சேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு உதவும்.

இக்கல்லூரியின் கட்டடமானது 2.5 ஏக்கர் (108900 சதுர அடி) பரப்பளவில் உள்ளது. இக்கட்டடம் மூன்றாடுக்குகளை கொண்டு போதுமான இடவசதியும் உள்ளது. அதில் நிர்வாக பகுதி வகுப் பறைகள் ஆய்வகம் நூலகம் ஆசிரியர்கள் தனி அறை உணவகம் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவியர்களுக் கென தனித் தனி தங்கும் விடுதி வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை கள்  ற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயில உள்ள மாணவ மாணவியர்கள் கால்நடை சார்ந்த அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக 10 கி.மீட்டர் தொலைவில் பெரிய குளம் அரசு கால்நடை மருத்துவ மனை அமைந்துள்ளது. மேலும் கற்றலுக்கு தேவையான அனைத்து கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட வுள்ளது. தேனி மாவட்ட மாணவ மாணவியர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாண வியர்களும் கால்நடை மருத்துவ கல்வி பயின்று பயன்பெறும் வகையில் அரசால் ஏற்படுத்தப் பட்டுள்ள அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடையே மகிழ்ச்சி யினை ஏற்படுத்தி பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி டி.சிநேகா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தனி அலுவலர் மரு.முருகேசன் பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.