தயாரிப்பாளர் சங்க தேர்தலில் புதிய அணி போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் டி.சிவா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயா ரிப்பாளர்களின் பாதுபாப்பு அணி என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும், 2 செயலாளர்கள் பதவி களுக்கு பி.எல்.தேனப்பன், ஜே.எஸ்.கே சதீ‌‌ஷ்குமார் ஆகியோரும், 2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரே‌‌ஷ், ஜி.தனஞ்செயன் ஆகியோரும் போட்டியி டுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.சீனி வாசன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், கே.நந்தகோபால், மனோபாலா, பாபுகணே‌‌ஷ், பஞ்சு சுப்பு, எம்.எஸ்.முருகராஜ், வினோத்குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். சென்னையில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப் படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாது காப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.