திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணி தொடா;பாக காஜாமலையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனை முகாம் மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப் லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை ஆகிய இடங்களை மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன். நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை போர்க்கால அடிப் படையில் நடந்து வருகின்றது வைரஸ் தொற்று உடை யோர் தகுந்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர் திருச்சி ராப்பள்ளி மாவட்டதில் இதுவரை 4517 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுள் 3239 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 1218 நபர்கள் தொடர் சிகிச்சையில் மருத்துவ மனையில் உள்ளனர். 60 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் பரிசோதனை திருச்சி மாவட்டதில் கிஆபெ விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியிலும் மற்றும் 6 பிற தனியார் பரிசோதனை மைய்யங்களிலும் நடத்தப்படுகின்றது. திருச்சி மாவட்டதில் இதுவரை 72589 நபர்கள் பரிசோதிக்கப்படட்டுள்ளனர். நோய் பாதிப்பு உடை யோர் திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையிலும் மற்றும் 15 அங்கீகரிக்கப்பட்ட தனி யார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.

திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 3712 நபர்கள் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 3259 நபர்கள் சிகிச்சை முடிந்து திரும்பி யுள்ளனர் கொரோனா நோய் அறி குறிகளின்றி நீரிழிவு மற்றும் இரத்த கொதிப்பு போன்ற தொடர் நோய்கள் ஏதும் இல்லாத 45 வயதிற்க்குட்பட்ட நோயாளிகள் மருத்துவ குழுவினரின் பரிசோத னைக்கு பின் அவர்களது வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வருகின்றனர். மாநகர மற்றும் கிராம புற பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு காய்ச்சல் மற் றும் இதர அறி குறிகள் உடைய நபர்களை முன் கூட்டியே கண்டறிந்து பரிசோதித்து சிகிச்சை யினை தாமதமின்றி வழங்கிட சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநக ராட்சியில் இது வரை 753 முகாம்கள் நடத்தப்பட்டு 45066 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்னர் இதுபோல் கிராமப்புற பகுதிகளில் 96 முகாம்கள் நடத்தப்பட்டு 4536 நபர்கள் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். இம்முகாம் களில் எடுக்கப்பட்ட 5592 சளி மாதிரிகளில் 678 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சுகாதாரபணி யாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று நோய் அறிகுறிகள் உடையோர் கண்டறியப்பட்டு சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .மேலும் அப்பகுதிகளை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் அறிகுறிகள் உடையோர் பற்றிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி  மாநகராட்சி பகுதியில் இரு மாதங்க ளில் 38 பகுதிகள் கண்டறியப்பட்டு மேற்குறிய நடவடிக் கைகள் மேற்கொள்ளபடுகிறது. இதுபோல் ஊரகபகுதிகளில் நான்கு இடங்கள் கட்டுப்படுத்தப் பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நோய்க்கான சளி தடவல் பரிசோதனைக்கு பின்மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இதெற்கென பிரத்தியேக சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு விமானங்களில் வந்த 22602 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய் தொற்று உடைய 123 நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வந்த 2417 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உரிய பரிசோத னை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் நியளள விவரங்களை கொண்டு பிறமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளையும் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வந்த பயணிகள் தத்தமது வீடுகளிலிலும்

அரசு தனிமைபடுத்துதல் மையங்களிலும் குறைந்தபட்சம் 7 நாட்கள் தனிமை படுத்தப்படுகின் றனர். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும்நிலையில் போதுமான முன்னேற்பாடு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .மகாத்மாகாந்தி மருத்துவமனையில் 780 படுக்கைகளும் தனியார் மருத்துவமனைகளில் 1327 படுக்கைகள் உயர் சிகிச்சைக்கென தயார்நிலையில் உள்ளன. இடைநிலை சிகிச்சைக்கென அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 922 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன கோவிட் நோயாளிகள் கவனிப்பு மையம் அறிகுறிகள் அற்ற நோயாளிகளை தனிமைப்படுத்திடவும் உரிய சிகிச்சை அளித்திடவும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது வரை திருச்சி மாவட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக கொட்டப்பட்டு மற்றும் காஜாமலை வளாகத்தில் தலா 200 படுக்கைகளும் வேளாண் கல்லூரியில் 200 படுக்கைகளும் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் வளாகத்தில் 400 படுக்கை களுமாகஅரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மொத்தம் 2090 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றுள் 2254 நபர்கள்தங்கி அதில் 1987 நபர்கள் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். நோய் தொற்றினை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் போன்ற உபகரணங்களும் சிகிச்சை அளிக்க பயன்படும் வெண்டிலேட்டர் போன்ற உபகரணங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளன. முக கவசம் கவச உடை கையுறை போன்ற தற்காப்பு உபகரணங்களும் போதிய அளவு இருப்பில் உள்ளன. பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் வழிமுறைகள் பற்றியும் தற்காத்து கொள்ள வேண்டிய நடைமுறைகளான முககவசம் அணிதல் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல். பொது இடங்களில் கூடுகையில் தனி மனித இடைவெளியினை பின்பற்றுதல் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர். ஜே. ராதாகிருஷ் ணன்.  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.வனிதா இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) டாக்டர். லெட்சுமி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சுப்ரமணி மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்  டாக்டர்.ஏகநாதன் மாநகராட்சி உதவி ஆணையர் தயாநிதி துணை இயக்குநர்கள் டாக்டர்.பிரியதர்ஷினி(மருத்துவம்) டாக்டர்.சாந்தி (தொழுநோய்) டாக்டர்.சாவித்திரி (காசநோய்) மாநகராட்சி நகரநல அலுவலர் டாக்டர்.யாழினி மற்றும் பலர் உடனிருந்தனர்.