துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

12.08.2019 மாலை எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, 2019ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை ரைபிள் கிளப் நிர்வாகிகள் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.