நீட் தேர்வை எதிர்த்து தமிழக காங்கிரசார் போராட்டம்

மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் கடலூர் ( தெற்கு ) காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி  தலைமையேற்று கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட தலை வர் திருநகர் பெரியசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே.ஐ. மணி ரத்தினம் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மருத்துவ மற்றும் பொறியி யல் கல்லூரி களுக்கு மாணவர்களை சேர்க்க மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் இன்று (28.8.2020) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் :

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சிவராஜசேகரன் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்  கே.வீ. தங்கபாலு தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்  சி.டி. மெய்யப்பன், மாநில பொதுச்செயலாளர்  கீழானூர் ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ராஜாஜி சாலை, சுங்கத்துறை அலுவலகம் அருகில் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  எம்.எஸ். திரவியம் தலைமையில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  உ. பலராமன், மாநில பொதுச் செயலாளர்கள்  கே. சிரஞ்ஜீவி,  டி. செல்வம் ஆகியோர் முன்னிலையில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே. வீரபாண்டியன் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  பொன். கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் புரசைவாக்கம் தொலைபேசி இணைப்பகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அடையார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர்  ஆர். தாமோதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  எம்.ஏ. முத்தழகன் தலைமையில் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்ட கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.