பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 13 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, தி.நகர், CIT நகர், ஸ்ரீராம்பேட்டை, எண்.17 முகவரியில் வசிக்கும் கணேஷ், வ/31, த/பெ.சீனிவாசன் என்பவர் TN07 AD 1993 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். கணேஷ் கடந்த 28.08.2019 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில், மேற்படி ஆட்டோவை ஓட்டிக்கொண்டு பாரிமுனை சிக்னல் அருகில் செல்லும்போது, அவ்வழியே வந்த 4 பேர் கணேஷின் ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ பிராட்வே, செம்புதாஸ் தெரு மற்றும் கூம்ஸ் தெரு அருகில் இருட்டான இடத்தில் செல்லும்போது, 4 பேரும் இறங்க போவதாக ஆட்டோவை நிறுத்த சொல்லி, 4 பேரில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் கணேஷை கழுத்தை நெறித்து பணம் கேட்டபோது, பணமில்லை என்றவுடன் கணேஷின் சாம்சங் செல்போனை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

பின்னர் கணேஷ், சற்று தூரத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் (த.கா. 20583) வெங்கடேசன் மற்றும் (த.கா.21048) மந்திரமூர்த்தி ஆகியோரிடம் கூறவே, தலைமைக் காவலர்கள் கணேஷின் ஆட்டோவில் ஏறி அப்பகுதியில் குற்றவாளிகளை தேடி வந்தபோது, NSC போஸ் ரோடு, ஹாட் சிப்ஸ் கடை அருகில் இருந்த 4 குற்றவாளிகளில் ஒருவரான 1.அண்ணாமலை, வ/27, த/பெ.ஹரி, எண்.3, 48வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எண்ணூர் என்பவரை பிடித்து B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் எதிரி அண்ணாமலை மீது B-2 எஸ்பிளனேடு, H-8 திருவொற்றியூர், M-5 எண்ணூர் மற்றும் M-6 மணலி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அண்ணாமலையிடம் விசாரணை செய்து, தப்பிச் சென்ற மற்ற குற்றவாளிகளான 2.சுரேஷ்குமார் (எ) வாண்டு, வ/25, த/பெ.குமார், எண்.19, ஈசாமூர்த்தி கோவில் தெரு, திருவொற்றியூர், சென்னை, 3.சூர்யா (எ) புறா, வ/24, த/பெ.பழனி, எண்.11/19, கே.ஆர்.ராமசாமி நகர் முதல் தெரு, திருவொற்றியூர், சென்னை, 4.வினோத், வ/30, த/பெ.பாபு, எண்.106, 27வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எண்ணூர் ஆகியோரை சில மணி நேரங்களில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர் கணேஷின் செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


2. அடையார் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 குற்றவாளிகளை கைது செய்து 90 சவரன் தங்க நகையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு. அடையார் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றிவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் தெற்கு மண்டல இணை ஆணையாளர் அறிவுரையின் பேரில் அடையார் காவல் மாவட்ட துணை ஆணையாளர் நேரடி கண்காணிப்பில் எஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சி.மகேஷ்குமார் தலைமையில் புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.ஐயப்பன், ஜெ-12 கானாத்தூர் தலைமைக்காவலர் திரு.விஜயகுமார் (த.கா.18066) எஸ்-10 பள்ளிக்கரணைகாவல் நிலைய தலைமைக்காவலர் திரு.வீராசாமி (த.கா.35495) எஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.ராமலிங்கம் (த.கா.35795), திரு.சி.ஜெபசிங் (த.கா.35712) எஸ்-9 பழவந்தாங்கல் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.நாராயணன் (த.கா.36042) ஆயுதப்படை காவலர்கள் திரு.பாலமுருகன், (த.கா.50570), திரு.வசந்தராஜ் (த.கா.30430) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வேளச்சேரி, சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, குமரன் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 1. கமலக்கண்ணன், வ/30, த/பெ.வரதகவுண்டர், எண்.65, சாவடி தெரு, ஆவனியாபுரம் கிராமம்,
திருவண்ணாமலை மாவட்டம் 2.தட்சிணாமூர்த்தி (எ) அனாதி, வ/44, த/பெ.விஜயராகவன், எண்.91, வடக்குதெரு, சேக்கரை பஜார், திருச்சி ஆகிய இருவரை கடந்த 11.07.2019 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்அவர்களிடமிருந்து 90 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

3.பெசன்ட் நகர் கடற்கரையில் வாலிபரிடம் செல்போன் பறித்த நபரை பிடித்து தலைமைக் காவலர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தரமணி, கானகம், நேருதெரு, எண்.4 என்ற முகவரியில் ஹேமச்சந்திரன், வ/19, த/பெ.குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 29.08.201 இரவு 8.30 மணியளவில் பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்று திருவிழாவில் பங்கேற்றுவிட்டு பெசன்ட் நகர், கடற்கரையில் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த இரண்டு நபர்கள் மேற்படி ஹேமச்சந்திரனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். உடனே ஹேமச்சந்திரன் வேளாங்கன்னி மாதா திருவிழா பாதுகாப்பு பணியிலிருந்த ஜெ-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய தலைமைக்காவலர்கள் ரமேஷ்குமார், (த.கா.32991) மற்றும் பாலசுப்பிரமணியன் (த.கா.32292) ஆகிய இருவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே தலைமைக்காவலர்கள் ரமேஷ்குமார், (த.கா.32991) பாலசுப்பிரமணியன், (த.கா.32292) ஆகிய இருவரும், ஹேமச்சந்திரன் செல்போன் பறித்த குற்றவாளி பற்றி கூறிய அடையாளங்களை வைத்து, செல்போன் பறித்த நபர்களில் ஒருவனை பெசன்ட்நகர் கடற்கரையில் தேடி கண்டுபிடித்து ஜெ-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் வியாசர்பாடியைச்சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 13 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (30.08.2019) நேரில் அழைத்து  பாராட்டி வெகுமதி வழங்கினார்.