பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருபத்தி ஐந்தாயிரம் (25000) பலன்தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக 5 இலட்சம் ரூபாய் நிதியினையும் 2.50 இலட்சம் பனைமர விதைகள் விநியோகத்திற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் 26.09.2019 அன்று உரப்புளி கிராமத்தில் பனை விதையினை விதைத்து மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு அளித்து துவங்கி வைத் தார். வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதற்கும் விவசாயப் பெருமக்களின் வரு மானத்தை உயர்த்தி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய உத்திகளை புகுத்தி நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

பனைமரம் தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது. பனை மரத்தில் வேர் தூர்பகுதி நடுமரம் பத்தை மட்டை உச்சிப்பகுதி ஓலை சில்லாட்டை பாளை-பீலி பனங்காய் பச்சைமட்டை சாரை ஓலை குருத்தோலை என அனைத்து பாகங் களுமே பயன் தரக்கூடியது. இந்தக் காரணங்களாலேயே பனைக்கு ‘கற்பக விருட் சம்’ என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இம்மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் ஆரோக்கியமான பானம் ஆகும். நுங்கும் பனங்கிழங்கும் உணவாக பயன் படுகின்றன. இவற்றின் ஓலை கூடைகள் தயாரிக்கவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கூரை வேயவும் பயன்படுகின்றது. தண்டுப்பகுதி வீடு கட்டப் பயன் படுகிறது. பனஞ்சாறு கற்கண்டாகவும் கருப்பட்டியாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. பனை மரங் களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பனைமரங்களின் சாகுபடி யினை உயர்த்தி பனை மரங்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதா ரத்தினை உயர்த்தும் நோக்கத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 110 விதி யின்கீழ் ‘நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் ‘பனை மரங் களுக்கு’ மாண்புமிகு அம்மாவின் அரசு முக்கியத்துவம் அளித்து வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப் பதற்கு முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயி களுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல் படுத்தப் படும்’ என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்தார்கள்.

அதன்படி நடப்பு ஆண்டில் 2 கோடி பனைமர விதைகளை மானாவாரி விவசாயி களுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக ‘நீடித்த மானாவாரி விவசாயத் திற்கான இயக்கத்தின்’ கீழ் மாநில அரசு ரூ.8 கோடி நிதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டு பனைமர விதைகள் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டேர் மானாவாரி நிலத்திற்கு 50 பனைமர விதைகள் வீதம் விநியோகிக் கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார் கோவில் பரமக்குடி முதுகுளத்தூர் கடலாடி மற்றும் கமுதி வட்டாரங்களில் பனைமர விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. இதேபோன்று மானாவாரி நிலங்களை பசுமைப் போர்வை போன்று மாற்றும் வகையில் நடப்பாண்டில் ஹெக்டேருக்கு ரூ.100- மதிப்புள்ள வாகை தேக்கு புளி வேம்பு இலுப்பை மகாகனி ரூடவ்ட்டி போன்ற பலன்தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.லூ.சொர்ணமாணிக்கம் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.எஸ்.எஸ்.சேக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.