பிணை உறுதி மொழியை மீறியதால் மீண்டும் ச்றையில் அடைப்பு

நசீர், வ/28, த/பெ.சபீர் அகமது, யாதவா தெரு, ஆதம்பாக்கம் என்பவர் மீது சுமார் 3 குற்ற வழக்குகள்உள்ள நிலையில், நசீர் கடந்த 10.03.2022 அன்று புனிததோமையர்மலை துணை ஆணையாளர் அவர்கள் முன்புசாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்திவாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொருகுற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால், நசீர் ஏற்கனவே கார் ஓட்டுநராக வேலைபார்த்த வீட்டின் பெண் உரிமையாளரை பின் தொடர்ந்துசென்று மிரட்டியது தொடர்பாக, கடந்த 29.03.2022 அன்று S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில்வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 05.05.2022 அன்றுஎதிரி நசீர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்குஉட்படுத்தப்பட்டார்.

அதன்பேரில், நசீர் 1 வருட காலத்திற்கு எந்தகுற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதிகொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியகுற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய புனிததோமையர்மலை துணை ஆணையாளர், திரு.A.பிரதீப், இ.கா.ப., அவர்கள், மேற்படி எதிரி நசீர் என்பவருக்கு, கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதிகொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன்செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 346 நாட்கள்பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்துஇன்று (09.05.2022) உத்தரவிட்டார்.

​​அதன்பேரில் குற்றவாளி நசீர் நன்னடத்தைபிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில்அடைக்கப்பட்டார்.