புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வலையனேந்தல் கிராமத்தில் 26.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதியரக நெல் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி விவசாய தாரர்களின் மகசூலை அதிகரிக்கவும் அவர்களின் வருவாயை உயர்த்தவும் வேளாண் துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூலமாக பல்வேறு விதை ரகங்கள் கண்டறிந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் விவசாய சூழ்நிலைக்கு உகந்த விதையினை தேர்வு செய்து சோதனை முறையில் பயிர் செய்யப்படவுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து 120000 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதே போன்று சிறுதானியங்கள் 6000 ஹெக்டேர் பயறு வகைகள் 5000 ஹெக்டேர் எண்ணெய் வித்துக்கள் பயிர்கள் 6000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையை நம்பியே அனைத்து உணவு தானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த வயது டைய வறட்சியை தாங்கக்கூடிய இரகங்களின் தேவை விபரங்களை அவ்வப்போது விவசாயிகள் மாவட்ட நிh;வாகத்திடம் தொpவித்து வருகின்றன. இதன் தொடர்சி யாக பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் அந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானி திரு. டேனியல் செல்லப்பா அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. 26.07.2019 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக வெளியிடப்பட்ட நெல் பயறு எண்ணெய் வித்து பயிர்களின் இரகங்கள் விவரத்தினை முதுநிலை விஞ்ஞானி விவசாயிகளுக்குஎடுத்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக பாபா அணு ஆராய்ச்சி நிலையத் தின் ஒருங்கிணைப்புடன் நெல் TDCM-1 Dubraj என்ற இரகம் இன்றைய தினம் மாநிலத்திலே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு திறன் அறியும் திடல் அமைக்கும் பொருட்டு 5 கிலோ நெல் விதை விவசாயிக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

வலையனேந்தல் கிராமத்தை சேர்ந்த திரு.துரைராஜ் என்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 5 கிலோ புதிய ரக நெல் விதை வழங்கி விதை நெல்லை வயலில் தூவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலை யத்தின் மூத்த விஞ்ஞானி திரு.டேனியல் செல்லப்பா வேளாண்மை இணை இயக்குநர் திரு.லூ.சொர்ணமாணிக்கம் மாவட்ட ஆட்சியாpன் நேர்முக உதவியாளர் திரு.எஸ்.எஸ்.சேக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.