பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணை யாளர் எச்.ஜெயலஷ்மியின் அறிவுரையின் பேரில், சென்னை பெருநகரிலுள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்தும் வருகின்றனர். மேலும், காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் மேற்பார்வையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், Child Friendly Corner என்ற பெயரில் குழந்தைகளுக்கான அறைகள் சிறந்த முறையில் ஓவியங்கள் தீட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருகை தரும் நபர் களின் குழந்தைகளுக்காக இந்த அறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணையாளர் எச்.ஜெயலஷ்மி 26.8.2020 அன்று W-26 அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு வருகை தரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான புகார்கள் மீது மிகுந்த கவனத்துடன் செயல் பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் காவல் துணை ஆணையாளர் (CAWC) அசோக்நகர், 3வது அவென்யு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள பள்ளியில் அரிசி, முகக்கவசங்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். பின்னர் துணை ஆணையாளர் W-25 தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், துணை ஆணை யாளரின் வழிகாட்டுதலின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு வருவதும், W-29 ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகம் தூய்மையாக்கப்பட்டு, சுற்றுச் சுவர் மீது இல்லறவியல் தொடர்பாக 16 திருக்குறள்கள் எழுதப் பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.