மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 23.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமை யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்கள் பெற்று அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் 1 பயனாளிக்கு ஒளி உருப்பெருக்கியினையும் 1 பயனாளிக்கு ப்ரெய்லி கைக்கடி காரத்தினையும் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 1பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரத்தினையும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு வாரிசுதாரர் திருமண உதவித் தொகையாக தலா ரூ.25000 வீதம் மொத்தம் ரூ.75000-க்கான காசோலைகளையும் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு ரூ.450000-க்கான காசோலைகளையும் முதலமைச்சாpன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம அமைச்சரின் ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவ காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோhpக்கை மனுக்களை வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாத வகையில் அவர்களுக்கு சிறப்பு அமர்விடம் ஏற்படுத்தப்பட்டு அவர்க ளிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும் இக்கூட்டத்தில் கோரிக்கை மனுக் களை வழங்கிய அனைத்து நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உணவு பொட்ட லங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சி. முத்துமாரி தனித்துணை ஆட்சியர் திரு.எஸ். சிவசங்கரன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.