முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிரபலங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை 24.7.2020 அன்று தமிழ் நாடு வியா பாரிகள் சங்கப் பேரவையின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஜி.வெள்ளத்துரை நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அப்போது, கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை உடனிருந்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமியை 24.7.2020 அன்று திருநெல்வேலி புறநகர் மாவட்டம், திமுக-வைச் சேர்ந்த திசையன்விளை பேரூராட்சி முன்னாள் செயலாளரும், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான  டிம்பர் டி.செல்வராஜ் நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அப்போது, கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை உடனிருந்தார்.