ராமநாதபுரம் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள்
இன்று (03.12.2019) நோpல் சென்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கியுள்ளதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப் படையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அந்தந்த உள் ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்றைய தினம் இராமநாதபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று அரசுத்துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். குறிப்பாக இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட கூhpசாத்த ஐயனார் கோவில் கேணிக்கரை இலட்சுமிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் இராமநாதபுரம் ஊராட்சி  ன்றியத்திற்குட்பட்ட பேராவூர் மேலக்கோட்டை சக்கரக்கோட்டை மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பட்டணம்காத்தான் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் அங்கன்வாடி மையங்களின் உறுதித்தன்மையினை ஆய்வு செய்து உறுதி செய்திடவும் அந்தந்த பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிடவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்திலுள்ள அனைத்து கண்மாய்கள் ஊரணிகளில் உள்ள தண்ணீhpன் அளவை தொடர்ந்து கண்காணித்திடவும் கரைகளின் உறுதித்தன்மையினை ஆய்வு செய்திடவும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக சாய்ந்துள்ள மின்கம்பங்களை உடனுக்குடன் சீர்செய்திட தமிழ்நாடு மின்சார வாhpய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில்
விழுந்துள்ள மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றிட நெடுஞ்சாலைத் துறை மற்றும் அந்தந்த உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உரிய முறையில் மீனவர்களுக்கு தெரிவித்திடவும் இயல்பான வானிலை சூழல் ஏற்படும் வரையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதை தவிர்ப்பதை உறுதி செய்திடவும் மீன்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக தயார்நிலையில் இருந்திட தீயணைப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது என தொpவித்தார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.சிவகாமி இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் திரு.விஸ்வநாதன் ஊரக வளர்ச்சி முகமை முதன்மைப் பொறியாளர் திருமதி.ஹேமா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மகேஸ்வரன் இராமநாதபுரம் வட்டாட்சியர் திரு.முருகவேல் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.