விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா

விருதுநகர்,ஆக-15: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், தேசப்பிதா மகாத்மாகாந்தி திருவுருவப் படத் திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மலிங்கம், மேற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர் ஆமத்தூர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.