ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

உண்மையான அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இதனை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வரும் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படக்குழு, மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. மிக விரைவில் இப்படத்தின் பெயரை அறிவிக்கவுள்ளது. முதல் நாள் முதலாக முழுத் திறமையையும், கடுமையான உழைப்பையும் கொட்டி, அனைவரும் ஆச்சர்யப் படும்படி குறைவான காலத்தில் படப்பிப்டிப்பை முடித்து, நேற்று படப்பிடிப்பு நிறைவை கொண்டடியுள்ளது படக்குழு. இந்த கொண்டாட்டத்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாட, நாயகன் ஹரீஷ் கல்யாண் மொத்த படகுழுவிற்கும் வீட்டில் தயாரான பிரியாணியுடன் விருந்தளித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது… ஒரு தரமான படம் அது எடுக்கப்படும்போதே அதன் பாதிப்பை சுற்றத்தில் ஏற்படுத்திவிடும் என்பார்கள். எங்களின் படப்பிடிப்பில் அது முற்றிலும் உண்மையானது. படப்டிபிடிப்பு முழுதுமே உற்சாகமாக, உணவு, கொண்டாட்டம், துள்ளல் என நிரம்பியிருந்தது. மேலும் அவர் நகைச்சுவையாக இப்படத்தால் எங்கள் படக்குழுவில் பலர் உணவுப்பிரியர்களாக மாறிவிட்டனர். மேலும் சிலர் உணவுக் கென தனி வலைத்தளம் Youtube தளம் ஆரம்பித்து விட்டனர் என்றார். நடிகர்கள் பற்றி கூறும்போது… ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் நடிப்பு தொழிலில் மிகவும் நேர்த்தியை கொண்டிருப்பவர்கள். சினிமா மீது காதல் கொண்டு அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள். ஹரீஷ் கல்யாண் கொண்டிருக்கும் பிம்பமானது எந்தவித கஷ்டமும் இல்லாமல் எளிதில் சாக்லெட் பாய் அவதாரம் எடுத்துவிடக்கூடியது. ஆனால் அவர் தன் தளத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் புதிதான அவதாரத்தை முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ரொமான்ஸ் காமெடி படம் என்றாலும் எல்லோர் வீட்டிலும் உலவும் கனவுகளை துரத்தும் நம் வீட்டு பையன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நாயகி பாத்திரத்திற்கு குறிக் கோள்கள் கொண்ட, தன்னம்பிக்கை மிக்க எழுச்சியான பெண் தேவைப்பட்டது. ப்ரியா பவானி சங்கர் வெகு எளிதாக இக்கதாப்பாத்திரத்தை செய்துவிட்டார். தமிழ் பேசும் நாயகியுடன் வேலை செய்வது, எந்த ஒரு தமிழ் இயக்குநருக்கும் சந்தோஷம் தரும். ப்ரியா பாவனி சங்கருடன் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பல உயரங்களுக்கு செல்லும் திறமை கொண்டவர் அவர். படத்தின் தற்போதைய கட்ட த்தை குறித்து கூறியபோது.. படத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு படப்பிடிப்பின் போதே டப்பிங் பணிகள் செய்யப்பட்டுவிட்டது. தற்போது உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு மிக விரை வில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தை கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.