இந்தியாவிற்கு வந்திருக்கும் வளைகுடா வாழ் இந்தியர்கள் திரும்பிச் செல்ல நடவடிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அப்துல் ரஹ்மான் கடிதம்

ஷேக்மைதீன்
————————-
வளைகுடா நாடுகளிலிருந்து விசாவுடன் இந்தியாவுக்கு வந்திருப்பவர்கள் திரும்பிச் சென்று பணியில் சேர்வது சம்பந்தமாக. சென்ற மார்ச் 2020 இல் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு எல்லா விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு அதே நிலை இன்று வரை தொடர்வது நாம் அறிந்ததே. அதன் விளைவாக, ஊரடங்கிற்கு முன் இந்தியாவுக்கு விசாவுடன் வந்த எல்லா இந்திய வணிகர்களும், இந்திய பணியாளர்களும் திரும்பிச் செல்வதற் குரிய வழிவகை இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆண்டு விடுமுறையில் அல்லது தங்களின் சொந்த தேவை நிமித்தமாக இந்தியா வந்து 26/03/2020 தேதியிலிருந்து திரும்பச் செல்ல முடியாமலும், அவரவர் பணிகளில் போய்ச்சேர முடியாமலும் உள்ளனர்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அந்நாட்டு விசா வைத்திருப்பவர் களை ஆன்-லைனில் பதிவு செய்து கொண்டு திரும்பி வரலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவரவர்களின் பெயர் மற்றும் விசா விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அதற்குரிய அனுமதியையும் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விசாவுடன் இருக்கிற வளைகுடா வாழ் இந்தியர்கள் அனைவரும் நமது இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான விமான சேவை இனிமேலும் தாமதமில்லாமல் எப்போது தொடங்கும் என ஆவலுடன் எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.

எனவே, வளைகுடாவாழ் இந்தியர்கள் விசேஷ விமானம் அல்லது தனியார் ஏற்பாட்டிலான விமான வசதிகளைப் பெற்று பயணிக்கத் தக்க வகையிலான அரசு அறிவிப்பு வருவதை பாராட்டி மகிழ ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று முன்னாள் வேலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான்
கடிதம் எழுதியுள்ளார்.